இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!
Mar 19, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற்போது காணலாம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வியாழக் கிழமை 242 பேருடன் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், புறப்பட்ட 5 நிமிடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது கடும் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக ஓடுபாதையைத் தாண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி, 166 பயணிகளுடன் துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது சரியான இடத்தில் நிற்க முடியாமல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதேபோல, கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி 55 பேருடன் பீகார் மாநிலம் பாட்னாவில் தரையிறங்க முற்பட்ட அலையன்ஸ் ஏர் பிளையிட் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தரையில் இருந்த 5 பேர் உட்பட 60 பேர் பலியாகினர்.

கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில், சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் 763 விமானம் மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் 1907 விமானம் ஆகியவை தொடர்பு கோளாறு மற்றும் உயர அறிவுறுத்தல்களை மீறியதால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 349 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி, 118 பேருடன் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம், எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் நுழைந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தால் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் சிக்கி 55 பேர் இறந்த நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கடந்த 1990-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, 146 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தரையிறங்க முயன்ற இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானம், முன்கூட்டியே தரையிறங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, 135 பேருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், தரையிறங்க முற்பட்டபோது போதிய வெளிச்சமின்மையால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேபோல, கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 213 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப முற்பட்டு இயந்திர கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து அரபிக்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.

Tags: இந்தியாவிமான விபத்துFatal plane crashes that rocked India (1975-2025)கோர விமான விபத்துகள்
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

Next Post

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies