பயங்கரவாத அமைப்புகளுக்கு அணு ஆயுதங்களை வழங்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலை அழிக்க நினைப்பதன் காரணமாகவே, தற்போது இந்த போர் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாத முகாம்களை மட்டுமே இஸ்ரேல் குறிவைத்து தாக்குவதாகவும், ஈரான் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேல் நலனுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் நலனுக்காக எனவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.