விபூதியை அழித்த திருமா - போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெற்றியில் பூசிய விபூதியை கோவில் வளாகத்திற்குள்ளேயே அழிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொண்டர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக விபூதியை அழித்ததாக விளக்கம் சொல்கின்றனர். முருகப்பெருமானின் அருட் பிரசாதமான விபூதி, இவர்களுக்கு அழகை குறைக்கும் பொருளாகத் தெரிகிறது. இதுபோன்ற போலி கபடதாரிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி அபகரிக்கும் கும்பலுக்கு எதிராக இந்துக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இவர்களோ, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவினரும் அவர்களின் கூட்டணி கட்சியான விசிக-வும் செய்து வருவது மோசடி அரசியல். இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து பயந்து போன இவர்கள், தற்போது இந்து மத நம்பிக்கையில் ஆர்வமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கபட நாடகத்திற்காகத் தான் திருமாவளவன் அவர்களும் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார். அரிதாரம் பூசி நடிப்பதைப் போன்று கோவிலுக்கு சென்று விபூதி பூசிக் கொண்டு, அதை கோவில் வளகாத்திலேயே அழித்துள்ளார். இவர்களுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியும் பாடம் புகட்டுவார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Vibhuti issueTamil Naduminister l muruganthirumavalavanLord Muruga.
ShareTweetSendShare
Previous Post

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

Next Post

பொய்யான வாக்குறுதிகள் அளித்த திமுக – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies