மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் கர்நாடகா, இமாச்சல் அணிகள் வெற்றி வாகை சூடின.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் நடைபெற்றது.
அப்போது கர்நாடகா, மகாராஷ்டிரா மகளிர் அணியை 12-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. 2-வது போட்டியில், கேரளாவை இமாச்சல் அணி வீழ்த்தியது.