பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் ஹில்பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளின் அடையாளங்களையும் கைதானவர்கள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.