கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் ஆட்டோ மீது சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரில் சேதமடைந்த மின் கம்பத்திற்கு அருகில் புதிதாகக் கம்பம் நடப்பட்டது.
இந்த நிலையில், புதிதாக நடப்பட்ட மின் கம்பம் திடீரென சரிந்து ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் பேச்சியான் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
புதிய கம்பம் நடப்பட்டு 5 நாட்கள் கூட ஆகாத நிலையில், கம்பம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேதமடைந்த மின்கம்பத்தை விட தற்போது நடப்பட்ட மின்கம்பம் தரம் இல்லாமல் மிக மோசமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.