ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், காவிரி கரையோர பகுதிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் வெளியேற்றினர். நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.