நீலகிரி மாவட்டம் பாடந்துறையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாகப் பத்தேரி-வயநாடு செல்லும் சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.