தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை
Nov 15, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 26, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர்  ஸ்டாலின், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார்.

ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை. தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags: நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்DMKஅண்ணாமலைbjp k annamalaidmk stalinChief Minister Stalin is shedding tears by not stopping fare theft in private buses: Annamalai
ShareTweetSendShare
Previous Post

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies