சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!
Nov 15, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று இடம் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்சம் ஆகும் எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் முதல் இராக்கோட்டை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சாலைவிரிவாக்கத்திற்காக மரங்களோடு அப்பகுதியில் இருந்த 200க்கும் அதிகமான குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமோ பாறைகள் இருக்கும் இடமாக அமைந்திருக்கிறது.

அரசு ஒதுக்கியிருக்கும் மாற்று இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அதற்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது என்பது இயலாத காரியம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றன. மாவட்ட நிர்வாகமோ இதுவரை மாற்று இடம் வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது.

குடியிருப்புகளை இழந்த அனைவரும் கூலி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதோடு, தற்போது மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியிருக்கும் இடத்தில் வீடுகட்டுவதற்குப் பணமில்லாமல் சிரமப்படக்கூடியவர்களாகவும் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத தங்களைப் பாறைகளை மிகுந்த பகுதியில் குடியிருக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றாக மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMKபரிதவிக்கும் மக்கள்Residences demolished for road expansion: People in distress
ShareTweetSendShare
Previous Post

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Next Post

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies