இன்ஸ்டாகிராம் மூலம் வைரலான கூமாபட்டி அடுத்த பிளவக்கல் அணைக்குச் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதித்துப் பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு “கூமாபட்டிக்கு வாங்க” என்று தங்கப்பாண்டி என்ற நபர் இன்ஸ்டாகிராமில் ரீல் ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில் கூமாபட்டி ஒரு ஐலேண்ட் என்றும் இங்கு உள்ள தண்ணீர்ச் சர்பத் போல் இனிக்கும் என்றும் தங்கப்பாண்டிக் கூறியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கூமாபட்டி நோக்கி வரத் தொடங்கி நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தங்கப்பாண்டி ரீல் எடுத்த பிளவக்கள் டேம் பகுதியில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை எனப் பொதுப்பணித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சிலர் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து அணைக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்த பொதுப்பணித்துறையினர், ரீல்ஸ்களை நம்பி யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் என்றும் தடையை மீறி உள்ளே நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.