தமிழக அரசு செயல்படாத அரசாக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை தம்மிடம் உள்ளதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை என தெரிவித்தார்,
திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் முதல்வரிடம் துணை முதல்வர் பதவி கேட்க சொல்லுங்கள் என்றும் அவர் கூறினார்.
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும் நிலையில் உள்ளதாகவும், திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் கூட்டணியாக பாஜக கூட்டணி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.