இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி - முன்னோடியான இளைஞர்!
Jul 2, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர். யார் அந்த ரோபோடிக் எஞ்சினியர். அவரின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்காக ஊரணி புரத்தைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர் தான் இந்த தேவேந்திரன். விவசாயத்தின் மீதிருந்த அதீதப்பற்றால் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு தஞ்சாவூருக்குத் திரும்பிய தேவேந்திரன் தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். நம்மாழ்வாரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட தேவேந்திரன் தான் மேற்கொண்டுவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

விவசாயத்தை விளையாட்டாக மேற்கொள்வோம் என்ற நம்மாழ்வாரின் கூற்றையே அடிப்படை நெறியாகக் கொண்டிருக்கும் தேவேந்திரன், சோழர்கால பாரம்பரிய தற்காலிக கலையான குத்து வரிசை, அடிமுறை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பயிற்சி பள்ளி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

பாரம்பரிய உணவை உட்கொள்ள வேண்டும், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இக்கலையைக் கற்க முக்கிய கோட்பாடாகவும் தேவேந்திரன் வைத்திருக்கிறார். சோழர்கால தற்காப்புக் கலைகளைப் பயில்வதன் மூலமும், சத்தான பாரம்பரியமிக்க உணவை உண்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிவதாகப் பயிற்சிபெறும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்மாழ்வாரின் வார்த்தைகளையே வாழ்வியல் தத்துவமாகப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்வதோடு, இளைய தலைமுறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் தேவேந்திரன் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Tags: இயற்கை விவசாயம்Love for organic farming: Trying to preserve tradition - a pioneering youthஇளைஞர்
ShareTweetSendShare
Previous Post

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Next Post

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

பாகிஸ்தான் : பலத்த காற்றால் விழுந்த பெயர் பலகை – ஒருவர் படுகாயம்!

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கும் மசோதா : டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies