பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!
Jul 1, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஆ. ராசாவை கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆ. ராசாவை கண்டித்து திட்டமிட்டபடி சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அநாகரிகமாகப் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து தமிழக பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.

தேசத்தின் தலைசிறந்த பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரை, சிறிதும் மேடை நாகரிகமின்றி பேசிய ஒருவரை எதிர்த்து போராட அனுமதி மறுப்பது தான் திராவிட மாடலா? பல பெண்களையும் ஏன் இந்து மதக் கடவுள்களையும் கொச்சையாக விமர்சித்து வரும் ஒருவரை கண்டிக்கக் கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? என்று நயினார் நாகேந்திரன்  கேள்வி எழுப்பி உள்ளார்.

கண்டனப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதைப் பார்த்தால், முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறாரா? அல்லது, முதல்வர் தான் இப்படி பேசச் சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராடும் உரிமைகளைப் பறித்து தடை விதிப்பது மிகப்பெரும் கொடூரம். ஆனால், எத்தகைய அராஜகத்தாலும், அடக்குமுறையாலும் நம் தமிழக பாஜக தொண்டர்களை ஒடுக்கி விட முடியாது. எனவே, திட்டமிட்டபடி சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் கைகள் கட்டப்படுவதை தமிழக மக்கள் பொறுமையாக பார்த்துக் கொண்டே இருக்க மாட்டார்கள். 2026-இல் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்! எனவே, தாமரை சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்! அரசியல் இயக்கங்களின் உரிமைகளை முடக்கப்பார்க்கும் பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: We will send the fascist regime home: Nainar Nagendran is determinedநயினார் நாகேந்திரன் உறுதிஆ. ராசாவை கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
ShareTweetSendShare
Previous Post

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Next Post

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies