சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டி பகுதியில் கமல்குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், மருந்து கலவை செய்யும் அறையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. வெடிவிபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர், மேலாளர், போர்மேன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.