தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது.
என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சையைச் சேர்ந்த பாவா பஹ்ருதீனின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 முதல் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்குச் சொத்துகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கவும், இஸ்லாமிய நாடுகளின் ராணுவ வலிமையை மேம்படுத்தவும் சொத்துகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் செயலில் குற்றவாளிகள் ஈடுபட்டதாகவும் என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது.