இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டது ஒரு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது எனவும் அந்த அதிகாரி யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டதில் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது என்றும் அஜித்குமார் மரணத்தில் போலீசார் மீது வழக்கு தொடர்வது எங்கள் நோக்கமல்ல என மாரீஸ்குமார் தெரிவித்தார்.
உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரிலே தாக்குதல் நடந்துள்ளது என்றும் 5 பேரைக் கைது செய்து ஒரு உயர் அதிகாரியைத் தப்பிக்க விடுகின்றனர் என்று வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
மாவட்ட எஸ்.பி மீதான நடவடிக்கை போதாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர் என்றும் சிபிசிஐடி தமிழக அரசின் கட்டுப்பாடு என்பதால் நியாயம் கிடைக்காது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தாக கூறியவர், அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் ஆளும் கட்சியினர் பேரம் பேசியதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.