பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தென்தமிழகத்தில், பரமக்குடி, ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலை 87, சுமார் 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைக்க, ₹1,853 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றியை தெரிவித்துள்ளார்.
மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை 87ல், இந்த நான்கு வழிச்சாலை அமையவிருப்பதால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பது உறுதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.