தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 பேர் காவல் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. விசாரணை எனும் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த நிகழ்வுகளில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்,,
ஆகஸ்ட், 2021 – சீர்காழியில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் மரணமடைந்தார்.
செப்டம்பர், 2021 – பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் மணிகண்டன் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்.
டிசம்பர், 2021 – ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல்நிலையத்திற்கு விசாரணக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஜனவரி, 2022 – தருமபுரி மாவட்டத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் சிறையில் மரணம் அடைந்தார்
பிப்ரவரி, 2022 – திருநெல்வேலியில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆமீன்புரத்தைச் சேர்ந்த சுலைமான் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்
ஏப்ரல் 2022, சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவலர்கள் தாக்கியதில் மரணம் அடைந்தார்
ஏப்ரல் 2022, திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்
ஜூன் 2022, சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைதான ராஜசேகர், காவல்நிலையத்திலேயே மரணம் அடைந்ததாக புகார் எழுந்தது
ஜூலை, 2023 – மதுரையில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணம்
ஜூன் 2025 – சிவகங்கையில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்துள்ளார்.