மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழிமறித்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மணிமாறனின் சகோதரர் காளிதாசன், செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் மணிமாறன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன், அருண்குமார், புருஷோத்தமன் உள்ளிட்ட 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.