மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப் பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை வெளியிட்டபின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறேன் எதின்றும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப் பயணத்தின் நோக்கம் என்றும் திமுக ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் விளக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த சுற்றுப் பயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்பதற்குப் பத்திரிகை செய்திகளே சான்று என்று அவர் குற்றம்சாட்டினார்.
வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் அளவிற்கு திமுக பரிதாப நிலையில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.