தமிழ்நாட்டில் திமுக இருக்க கூடாது என்பதே தங்களின் கொள்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரத்தின் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. வின் B டீம் தவெக என்பது ஆளுங்கட்சியின் பிரச்சாரம் என தெரிவித்தார். விஜய் கருத்தில் மாறுபாடு உள்ளதாகவும், அவர் தனியாக தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, மீண்டும் இணைந்ததால் திமுகவினர் பதற்றத்தில் உள்ளதாகவும்,திமுக வேண்டாத பிரச்சாரத்தை கையில் எடுத்து உள்ளதாகவும் நயினார் நாகேந்திரத்தின் குறிப்பிட்டார்.