விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 7, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு  செலவிடவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதலமைச்சர் ஸ்டாலின்
கண்டுகொள்ளாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags: social justiceSTUDENTS HOSTELMK StalinDMK government
ShareTweetSendShare
Previous Post

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Next Post

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Related News

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies