தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
முறையாகப் பராமரிப்பின்றி சேதமடைந்த விடுதிகள் இன்றும் உள்ளது என்றும் எத்தனை விடுதிகளை முதலமைச்ச ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார் என்று எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் ஆய்வு நடத்தி இருப்பார் என்றும் விடுதிகளின் குறைகளை நிவர்த்தி செய்து அதற்கான நிதியை அரசு ஒதுக்கி இருக்க வேண்டும் என்றும் வெற்று விளம்பரத்திற்காக நேரத்தைச் செலவிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
மலை வாழ் மக்களுக்கான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கிறது என்றும் சிவகாசியில் பட்டாசு விபத்து என்பது வாடிக்கையாக மாறிவிட்டது என்றும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு அம்சங்களைத் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.