கனமழை காரணமாக ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள ஹிராகுட் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மகாநதி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹிராகுட் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 20 மதகுகள் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஹராகுட் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.