கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்ததைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி முன்பு திரண்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஏராளமான பாஜகவினர் கைகளில் கட்சிக் கொடியை ஏந்தியவாறு கூடியதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.