திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மது போதையில் ஆசிரியர் பள்ளிக்கு வந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வையமலை பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் தன்னிலை மறந்து தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அங்குள்ள சேர்களை கீழே தள்ளி ரகளை செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கீழே விழுந்த ஆசிரியரைப் பொதுமக்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். ஆசிரியர் செயல் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.