பெருங்குடியில் உள்ள சாலை, திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை பெருங்குடி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடித்தளம் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு கனரக இயந்திரங்கள் மூலம் அதனைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது அருகில் உள்ள சதாசிவம் சாலையில் பலத்த சத்தத்துடன் திடீரென வெடிப்பு ஏற்பட்டு 100 அடி நீளத்திற்கு உள்வாங்கியது.
இதனால் அருகில் வசித்து வந்த மக்கள், அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சென்ற அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.