முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருப்பதாகவும், ஆனால் அதிமுக மக்களை நம்பி இருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலை முன்னிட்டு, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் கோவை மாவட்டம் வடவள்ளியில் சுற்றுப்பயணம் சென்றபோது பேசிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து விட்டு, அதில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒய்யாரமாக சென்றதாக இபிஎஸ் விமர்சித்தார். இதேபோல், ஆயிரத்து 100 கோடி ரூபாயில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 3-வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்ததாக கூறினார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருப்பதாகவும், ஆனால் அதிமுக மக்களை நம்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.