தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிசாவசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், புலியகுளத்தில், இந்த ஆட்சியில் தொழில்துறையினர் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும், ஓர் அணியில் இருந்து திமுக ஆட்சியை விரட்டுவோம் என்றார்.
மத்திய அரசின் நிதிக்கு கணக்கு கேட்டால் போதிய நிதி வரவில்லை என்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நேற்று தான் புயல் மையம் கொண்டது என்றும், து இன்று சூறாவளியாக சுழன்று கொண்டிருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் சுற்று பயணம் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.