சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அருணா. இவரும் இவரின் கணவரான மோகன் குப்தாவும் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகின்றனர். வீடுகளில் உட்கட்டமைப்பு மற்றும் அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை மோகன் குப்தா நடத்தி வருகிறார்.
இவர் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்த அமலாக்கத்துறையினர் 4 பேர், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.