திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பராமரிப்பின்றி இயங்கி வந்த காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது.
திருப்பூர் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள செறியன் காடுதோட்டம் என்ற இடத்தில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட விஜயா சிமெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது.
இங்குள்ள காற்றாலை ஒன்று திடீரென கீழே விழுந்து உடைந்தது. சேதமடைந்த காற்றாலையின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காற்றாலை விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், காற்றாலைகளை முறையாகப் பராமரித்து இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.