மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மெக்சிகோவின் பியூப்லாவில் உள்ள இக்னாசியோ ரோமெரோ வர்காஸில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.