நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மார்க்கெட்டில் ஆயிரத்து 700 கடைகள் உள்ள நிலையில், கடைகளை அதிநவீன வாகன நிறுத்துமிடம் வசதியுடன் இடித்துக் கட்டும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய வியாபாரிகள், இரண்டாம் கட்ட இடிப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.