ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி குறித்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், மோரோபந்த் ஒரு தன்னலமற்ற தன்மையின் உருவகமாக திகழ்ந்தார் என குறிப்பிட்டார்.
தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி என புகழாரம் சூட்டிய மோகன் பகவத், அவசரநிலைக்குப் பிந்தைய அரசியல் குழப்பத்தின்போது முடிவுகளை சரியாக கணித்தவர் பிங்லி என தெரிவித்தார்.
பிங்லி தனது கடைசி காலத்தை நாக்பூரில் கழித்ததாகவும், தனது சாதனைகள் குறித்து ஒரு வார்த்தை கூட பிங்லி கடைசி வரை பேசவில்லை எனவும் மோகன் பகவத் கூறினார்.