காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா வரும் நிகழ்வு, விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா, கடந்த 19ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாகத் தொடங்கியது.
காரைக்கால் அம்மையார் என்றழைக்கப்படும் புனிதவதி தாயார்-பரமதத்த செட்டியார் திருக்கல்யாண வைபவம் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, சிவபெருமான், பிச்சாண்ட மூர்த்தியாக எழுந்தருளி காட்சி அளித்தார்.
சிவவாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற்றது. அப்போது, சுவாமிக்குக் காரைக்கால் அம்மையார் மாங்கனியை வழங்கியதை நினைவு கூறும் வகையில் மாங்கனிகளை வீசி எறிந்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.