அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்தச் சிதறி வருகிறது.
ஹவாய் தீவில் தீவிர செயல்பாட்டில் உள்ள எரிமலையான கிலாவியா எரிமலை அவ்வப்போது வெடித்து நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது.
நேற்று முதல் மீண்டும் வெடித்து வரும் கிலாவியா எரிமலை, தொடர்ந்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது. இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.