காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்தது.
காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்த தனுஷின் சகோதரன் இந்திர சந்த் என்பவரை கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரின் தந்தை வனராஜன், அவரது உறவினர்கள் கணேசன், மணிகண்டன் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை முடிவடைந்தது.
இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தக் கூடும் என்று தெரியவந்துள்ளது.