இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரபேல், F-35 விமானங்களை விட விலை மலிவான கூடுதல் திறன் உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் MK1a போர் விமானங்களை 60 ஆயிரம் கோடிக்கு வாங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் சுயசார்பு திட்டத்தின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த நகர்வு, பாகிஸ்தான், சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலைத் தீரத்துடன் எதிர்கொள்ளும் விதமாக ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது. அந்த வகையில், உள்நாட்டுத் தயாரிப்பாள தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறது.
தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில் உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த போர் விமானத்தில், மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன், மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.
4.5ம் தலைமுறை விமானமான எம்.கே.1ஏ போர் விமானத்தில் இருந்து பல வகை சூப்பர் சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும், BrahMos cruise, Astra Mk-2 ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய எல்லையிலிருந்தபடி 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.
வான்வழியிலும், தரையிலும் ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட தேஜாஸ் எம்.கே. 1ஏ போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 97 விமானங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 போர் விமானங்களை வாங்கும் இந்தியா, யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 194 கோடி செலவு செய்கிறது. அதன்படி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 78 ஆயிரத்து 998 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.
பிரிட்டனின் 5ம் தலைமுறை போர் விமானமான F-35 போர் விமானம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 942 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ஏ.கே.1ஏ போர் விமானம் ஒன்றின் மதிப்பு 618 கோடி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஃபேல், F-35 போர் விமானங்களை விடக் குறைந்த செலவில், கூடுதல் விமானங்களை இந்தியா வாங்க முடியும்.
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், 2031ம் ஆண்டுக்குள் 97 எம்.கே.1ஏ விமானங்களை வழங்குவதாக HAL நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.