நாமக்கல்லில் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தன்னார்வர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றி வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகக் காவிரி ஆற்றில் வெளியேறும் தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு வழியாக டெல்டா மாவட்டங்களைச் சென்றடைகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 6 கிலோமீட்டர் வரை ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளன.
அவற்றை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு வாரமாக ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனர்.