நாய் கடிக்குச் சிகிச்சை பெறும் சிறுமியைப் பார்க்க வந்தபோது உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் தங்கை பிரியா, திருமணமாகி கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அவரது மகளைத் தெரு நாய் கடித்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியைப் பார்க்க வந்த கருப்பசாமி, குழந்தைக்கு ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறித் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கருப்பசாமியின் அக்காள் கணவர் குலசிவேலு, நாய் கடிக்கு அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் குலசிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பசாமி கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சென்ற போலீசார், குலசிவேலுவை கைது செய்தனர்.