மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பழைய பொருட்களை வைத்து உருவாக்கப்படும் கலைப் படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி, பிம்பிள் சவுதாகரில் “வேஸ்ட் டு வொண்டர் வேர்ல்ட்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பூங்காவைக் கட்டமைத்து வருகிறது.
அதன்படி உலகின் ஏழு அதிசியங்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள், பழைய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கலைப் படைப்புகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளன.