ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி அருகே மெத்தனால் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோட்புட்லி-அம்பாலா நெடுஞ்சாலையில் மெத்தனால் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. பெஹ்ரூர் பகுதியில் பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து லாரியிலிருந்து எரிவாயு கசிந்ததால் அங்குப் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தி, லாரியை அப்புறப்படுத்தினர்.