நெல்லையில் மின்மாற்றியை மாற்றித்தர மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் திமுக கவுன்சிலரின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் 7-ஆவது வார்டில் பல இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வார்டின் திமுக கவுன்சிலர் இந்திராமணியின் கணவரும், திமுக பிரமுகருமான மணி என்பவர், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றி அமைக்குமாறு சமாதானபுரம் மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
அதன் பேரில் ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், மின்மாற்றி அமைக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மின்வாரிய ஊழியர்களைக் கண்டித்து, சமாதானபுரம் மின்வாரிய அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகத் திமுக பிரமுகர் மணி எச்சரித்துள்ளார்.