பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், ஏராளமான படங்களில் வில்லன் வேடத்திலும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர், 750 படங்களுக்கும் மேல் நடித்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவரது நடிப்பில் கடைசியாக 2023-ஆம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது. இந்த நிலையில், 83 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ‘
ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.