விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதில் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளனாது. சம்பவ இடத்தை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், சரக்கு ரயிலில் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் எஸ்பி தெரிவித்தார்.