சென்னை மாநகர பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்னை மாநகர பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. இதில், 50 வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாரடைப்பு ஏற்பட்ட ஒட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.