விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக, தன்னம்பிக்கையும் பெருமையும் நிறைந்த தேசமாக தெரிகிறது என, சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களும் பூமிக்கு திரும்பவுள்ள நிலையில், பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய சுக்லா, இந்த பயணம் நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.
மனித குலத்தின் விண்வெளி பயணம் நீண்ட வரலாறு கொண்டது எனவும், மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார். இருப்பினும், மனிதர்களாகிய நாம் அனைவரும் உறுதியாக இருந்தால், நட்சத்திரங்களை கூட எட்ட முடியும் என சுபான்ஷு சுக்லா கூறினார்.
41 ஆண்டுகளுக்கு முன்பு ராகேஷ் சர்மா விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படி இருந்தது என்பதை தங்களிடம் கூறியதாக தெரிவித்த அவர், இன்றைய இந்தியா உலகத்தின் மிக சிறந்த நாடாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
நிறைய நினைவுகளை சுமந்துகொண்டு பூமிக்கு வரவுள்ளதாகவும், அந்த நினைவுகளை தனது நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.