திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
குப்பநத்தம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காக வந்த காவலர் மீது மின்சாரம் பாய்ந்தது. மேலும் 16 வயது சிறுவன் உட்பட 10-க்கும் மேற்பட்டோரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் காயமடைந்தவர்கள் அழைத்துச் செல்ல நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வராத நிலையில் அவர்கள் போலீஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அளித்த காவலர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.