பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம் பேட்டி அளித்தார்.
ப வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைப்பது சாத்தியமில்லாதது என்றும், ப வடிவில் அமர வைத்தால் மாணவர்கள் திரும்பி திரும்பி பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களுக்கு கழுத்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வகுப்பறைகள் சதுர வடிவில் உள்ளதால் ப வடிவில் அமைக்க சாத்தியமில்லை என கூறினார். ப வடிவ திட்டத்தை கைவிட்டு, மாற்று வழியே யோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.